No menu items!
No menu items!
More

    திருவஞ்சைக்களம்

    திருஅஞ்சைக்களம் (ஸ்ரீவஞ்சிகுளம்)

    இறைவர் திருப்பெயர் : அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
    இறைவியார் திருப்பெயர் : உமையம்மை.
    தல மரம் : சரக்கொன்றை
    தீர்த்தம் : சிவகங்கை.
    வழிபட்டோர் : சேரமான்.
    தேவாரப் பாடல்கள் : சுந்தரர் – தலைக்குத் தலைமாலை.
    தல வரலாறு

    பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.

    இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.

    வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை “யானை வந்த மேடை” என்று வழங்கப்படுகிறது.

    கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.
    சிறப்புகள்

    இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும்.
    அவதாரத் தலம் : கொடுங்கோளூர் – திருவஞ்சைக்களம் (கொடுங்கலூர்)
    வழிபாடு : இலிங்க வழிபாடு.
    முத்தித் தலம் : திருவஞ்சைக்களம் கொடுங்கலூர்.
    குருபூசை நாள் : ஆடி – சுவாதி.
    கேரள பாணியில் அமைந்த கோயில்.
    துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
    கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.
    இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் “திருவஞ்சைக் களத்து சபாபதி” என்று எழுதப்பட்டுள்ளது.
    கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன.

    சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.

    இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.
    அமைவிடம்

    மாநிலம் : கேரளா
    சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ.

    Latest articles

    சேரமான் பெருமாள் நாயனார்- 02

    ... பரவையார் சேரமானை அரசனாக கண்டு வணங்கி அவனுக்கு தனிமேடையிட்டு அமுதுபடைத்தார், அது அக்கால வழக்கமாய் இருந்தது. அரசன் மட்டும் முக்கனி உண்ணுதல் எனும் பெருமை இருந்தது. தனி மேடையில் அதை படைத்தார்...

    சேரமான் பெருமாள் நாயனார்- 01

    சேரமான் பெருமான்- கழறிற்றறிவார் நாயனார்- 01 கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்" : சுந்தரமூர்த்தி நாயனார் ஞானிகள் எனும் ரிஷிகளுக்கும் இந்த அடியார்களுக்கும் சில வித்தியாசம் உண்டு ஞானிகளும் ரிஷிகளும் உருவாகி வருவார்கள், ஆனால் சிவனடியார்...

    சேரமான் பெருமாளும்.. இஸ்லாமும்…

    இந்த சேரமான் பெருமான் கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றை படிக்கு முன் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இங்கு ஒரு குழப்பம் உண்டு ஒரே ஒரு சேரமான் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இஸ்லாமை தழுவி...

    சேரகுல வேளாளர்

    வேளாளர் என்ற பெயர் வேளாண்மையை பின்னணியாக கொண்டு உருவானது. வேளாளரின் மறுபெயரான வெள்ளாளர் என்பதும் வெள்ளத்தை ஆள்பவன் என்ற பொருளில் உருவானதாகும். இந்த இரண்டு பெயர்களும் இவர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள் என்பதை...

    Related articles

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here