No menu items!
No menu items!
More

    சேரகுல வேளாளர்

    வேளாளர் என்ற பெயர் வேளாண்மையை பின்னணியாக கொண்டு உருவானது. வேளாளரின் மறுபெயரான வெள்ளாளர் என்பதும் வெள்ளத்தை ஆள்பவன் என்ற பொருளில் உருவானதாகும். இந்த இரண்டு பெயர்களும் இவர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள் என்பதை உறுதி செய்கிறது.

    தமிழகத்தில் வெள்ளாளர்கள் என்றாலே நில உடைமையாளர்கள் என்பதும், இவர்கள் சமூக அடுக்கில் பிராமணர்கள், அரசர்களுக்கு அடுத்த நிலையில் இயங்கியதும், இன்றும் இவர்கள் இதே நிலையில் தொடர்கின்றனர்.

    வெள்ளாளர்கள் தாங்கள் வசிக்கும் இடம், தொழில் இவற்றை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். உதாரணத்திற்கு, கரூர், கோவை போன்ற சேரன் ஆண்ட பகுதியில் வசிக்கும் வெள்ளாளர் சேரகுல வேளாளர் எனவும்
    அதுபோல்,
    கொடிக்கால்(வெற்றிலை) விவசாயம் செய்து வந்த வெள்ளாளர் கொடிக்கால் வெள்ளாளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

    வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள் பல உள்ளன, அவற்றுள் ‘சேரகுல வேளாளர்’ முக்கியமானதாகும்.

    சேரகுல வேளாளர்களுக்கு சேரமான் பெருமான் குலகுருவாக இருக்கிறார். சேரமான் பெருமாள் நாயனாரின் சிலை கோவை, பேரூர் கோவிலில் அமையப்பெற்றுள்ளது. பேரூரில் வருடந்தோறும் (ஆடி-சுவாதி யில்) குரு பூசை வழிபாடும், பேரவைக் கூட்டமும் நடந்து வருகிறது. இதனை தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கம் சிறப்பாகச் செய்து வருகிறது.

     

    சேரகுல வேளாளர்(Cherakula Vellalar) சமுதாய மக்கள் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் குறிப்பிடத்தக்களவில் வாழ்கின்றனர்.

    கோவையில் சிங்காநல்லூர், குறிச்சி, சுந்தராபுரம், வெள்ளலூர், பேரூர், செல்வபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். பொள்ளாச்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர், ஆனைமலை பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

     

    சேரகுல வேளாளப்  பெருமக்கள் சுதந்திர போராட்ட வீரராக, ஆராய்ச்சியாளராக, கல்வியாளராக, நில உடைமையாளராக, கணக்காளராக, நில அளவையராக, தொழில் முனைவோராக  அரசியலிலும் இருந்து வருகின்றனர்
    சேரகுல வேளாளர்களின் சத்திரம்/மடம், பழனி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர் மற்றும் குறிச்சியில் உள்ளது. இங்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளது.

    சேரகுல வேளாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள், பிள்ளை பட்டத்தினுடைய மற்ற உட்பிரிவுகளான சோழிய, பாண்டிய வேளாளர்களுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். இது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

     

    Latest articles

    சேரமான் பெருமாள் நாயனார்- 02

    ... பரவையார் சேரமானை அரசனாக கண்டு வணங்கி அவனுக்கு தனிமேடையிட்டு அமுதுபடைத்தார், அது அக்கால வழக்கமாய் இருந்தது. அரசன் மட்டும் முக்கனி உண்ணுதல் எனும் பெருமை இருந்தது. தனி மேடையில் அதை படைத்தார்...

    சேரமான் பெருமாள் நாயனார்- 01

    சேரமான் பெருமான்- கழறிற்றறிவார் நாயனார்- 01 கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்" : சுந்தரமூர்த்தி நாயனார் ஞானிகள் எனும் ரிஷிகளுக்கும் இந்த அடியார்களுக்கும் சில வித்தியாசம் உண்டு ஞானிகளும் ரிஷிகளும் உருவாகி வருவார்கள், ஆனால் சிவனடியார்...

    சேரமான் பெருமாளும்.. இஸ்லாமும்…

    இந்த சேரமான் பெருமான் கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றை படிக்கு முன் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இங்கு ஒரு குழப்பம் உண்டு ஒரே ஒரு சேரமான் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இஸ்லாமை தழுவி...

    சேரகுல வேளாளர்

    வேளாளர் என்ற பெயர் வேளாண்மையை பின்னணியாக கொண்டு உருவானது. வேளாளரின் மறுபெயரான வெள்ளாளர் என்பதும் வெள்ளத்தை ஆள்பவன் என்ற பொருளில் உருவானதாகும். இந்த இரண்டு பெயர்களும் இவர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள் என்பதை...

    Related articles

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here