இந்த சேரமான் பெருமான் கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றை படிக்கு முன் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்
இங்கு ஒரு குழப்பம் உண்டு ஒரே ஒரு சேரமான் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இஸ்லாமை தழுவி அரேபியாவுக்கு சென்று மரித்ததாகவும் அவரைத்தான் கயிலாயம் சென்றுவிட்டார் என சைவ சமயத்தார் குறிப்பிடுவதாகவும் ஒரு திரிப்பு உண்டு
உண்மையில் சேரமான் என்பது பதவி பெயர், நிறைய சேரமான்கள் இருந்தார்கள்
அதில் ஒருவர் 7ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாத்தை தழுவியது நிஜம் , மெக்கா சென்றது நிஜம் ஓமானில் அவருக்கு கல்லறை இருப்பதும் நிஜம்
இந்தியாவில் முதலில் இஸ்லாம் கேரளாவில்தான் பரவியது அரேபியாவுக்கும் அவர்களுக்கான மிக நீண்டகால கப்பல் தொடர்பு அதற்கு வழிசெய்தது. ஆனால் இஸ்லாமை சேரமன்னன் ஏற்றபின்னும் ஒரு மசூதி கட்டபட்ட பின்னும் அது தீவிரமாக பரவவில்லை
காரணம் இஸ்லாமை ஏற்ற மன்னன் திரும்பி வரவில்லை, அந்த அரசன் போக ஏகபட்ட அரசுகளும் கொள்கையும் இருந்தது, அதுபோக அன்றைய சமூகத்தில் இருந்த சில காரணங்களும் அதை பரவவிடவில்லை
இஸ்லாம் பின் ஆப்கானியர் வழியாக வடக்கே வந்து பின் மொகலாயர் காலத்தில் தீவிரமாக பரவியதெல்லாம் பிற்காலத்தில் நடந்தவை
இந்த சேரமான் நாயனார் சேரமன்னர்களில் ஒருவர் அவர் சிவபக்தியால் நாயன்மார் நிலை அடைந்து கயிலாயம் அடைந்தவர்
அந்த இஸ்லாமிய சேரனும் இந்த சேரமான் பெருமானும் வேறு வேறு காலத்தில் வாழ்ந்த வேறுபட்ட மன்னர்கள், ஆட்சி செய்த இடமும் வேறு
இதனை புரிந்து கொண்டு சேரமான் பெருமான் கழறிற்றரிவாரின் கதையினை படிக்க வாருங்கள்

Comment
Share